ஆந்திராவில் தம்பதிகளுக்கு ரூ.25,000.. அரசின் அதிரடி அறிவிப்பால் பெற்றோர் குதூகலம்..!

இனி ஆந்திராவில் எந்த வீட்டில் பார்த்தாலும் குவா.. குவா.. என்ற சத்தம் ஒலித்துகொண்டே இருக்கும்.
ஆந்திராவில் தம்பதிகளுக்கு ரூ.25,000.. அரசின் அதிரடி அறிவிப்பால் பெற்றோர் குதூகலம்..!
Published on

அமராவதி,

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை ஆகிய சவால்களைச் சமாளிக்க, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு புரட்சிகரமான மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை அறிவித்துள்ளார். இந்தக் கொள்கையின் கீழ், அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குப் பல்வேறு நிதியுதவிகள் மற்றும் சலுகைகளை அரசு வாரி வழங்கி உள்ளது.

* இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குத் தலா ரூ. 25,000 ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும்.

* மூன்றாவது குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக, அக்குழந்தைக்கு 5 வயது ஆகும் வரை மாதம் ரூ. 1,000 வீதம் மொத்தம் 60 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

* 18 வயது வரை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகைகளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

*தாய்மார்களுக்கு 12 மாதங்கள் (ஒரு வருடம்) சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு.

*தந்தைமார்களுக்கு 2 மாதங்கள் தந்தைவழி விடுப்பு.

* கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டத் திருத்தங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

ஆந்திராவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate - TFR) தற்போது 1.5 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவை விட மிகவும் குறைவு. இதனால், 2047-ம் ஆண்டிற்குள் ஆந்திரா ஒரு "வயதான மாநிலமாக" மாறும் அபாயம் உள்ளதால், இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதல்-மந்திரி இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசின் இந்த அதிரடி சலுகையால் பெற்றோர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். இனி ஆந்திராவில் எந்த வீட்டில் பார்த்தாலும் குவா குவா என்ற சத்தம் ஒலித்துகொண்டே இருக்கும் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com