கார் டிரைவரிடம் உல்லாசம்: இடையூறாக இருந்த கணவரை திட்டம் போட்டு கொலை செய்த மனைவி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
கார் டிரைவரிடம் உல்லாசம்: இடையூறாக இருந்த கணவரை திட்டம் போட்டு கொலை செய்த மனைவி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35).  இவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிவானி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த ரமேஷ், ஒன் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் 2012 இல் ஷிவானியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷின் நண்பரான ராமாராவ் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.  அவர், கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.  அப்போது ஷிவானியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலமாக ரமேசுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து, மனைவியைம், நண்பரான ராமாராவையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் பழகி வந்துள்ளனர். இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.

அதன்படி கடந்த 1ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய ரமேசுக்கு மனைவி ஷிவானி மது ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. போதையில் மட்டையான ரமேஷை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார்.  பின்னர், எதுவும் தெரியாதது போல மறுநாள் காலையில் மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததாக கதறி அழுது நாடகமாடியுள்ளார்.

இது குறித்து ரமேஷின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சந்தேகத்தின் பேரில் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரது செல்போனை ஆய்வு செய்தபோது ராமாராவுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. பின்னர், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com