தந்தையின் சொத்தை அபகரிக்க மகன் தீட்டிய கில்லாடி திட்டம்; துணைபுரிந்த தாய்...!

முன்னப்பா கடந்த 5ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தந்தையின் சொத்தை அபகரிக்க மகன் தீட்டிய கில்லாடி திட்டம்; துணைபுரிந்த தாய்...!
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தம்பிகனிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முன்னப்பா. இவருக்கு ஞானம்மா, முனியம்மா என 2 மனைவிகள் உள்ளனர். இதில், ஞானம்பாவுக்கு சுரேஷ் என்ற மகனும், முனியம்மாவுக்கு மஞ்சுநாத் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

இதனிடையே, முன்னப்பா கடந்த 5ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், தந்தை உயிரிழந்த நிலையில் சொத்தில் பங்குகேட்டு 2வது மனைவி முனியம்மா குடும்பத்தினர் வந்துவிடுவார்கள் என சுரேஷ் நினைத்துள்ளார். இதனால் சொத்தை முழுமையாக அபகரிக்க சுரேஷ் கில்லாடி திட்டம் தீட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கு சுரேசின் தாயார் ஞானம்மாவும் துணைபுரிந்துள்ளார்.

அதன்படி, சுரேஷ் தனது தாயார் ஞானம்மாவை இன்று ஊரின் அருகே தோட்டப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். மேலும், தனது தந்தையின் 2வது மனைவியின் மகன் மஞ்சுநாத் தனது தாயை கட்டி வைத்துள்ளதாகவும், தந்தையின் சொத்தை அபகரிக்க மஞ்சுநாத் முயற்சிப்பதாகவும் கிராமத்தினரிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சுரேஷ் தனது தாயார் ஞான்ம்மாளுடன் சேர்ந்து மஞ்சுநாத் மற்றும் அவரின் தாயாரையும் வழக்கில் சிக்க வைத்து சொத்தை அபகரிக்கும் முயற்சித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com