

சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு நாட்டுத்தலைவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துக் கடிதத்தில், எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த அனைத்தையும் பெற வாழ்த்துகள். கடந்த சில ஆண்டுகளில், இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான பாரம்பரியமான உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். உங்கள் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.