ஜாகுவார் கார் வாங்கித்தர தந்தை மறுத்ததால்,பி.எம்.டபிள்யூ சொகுசுக் காரை ஆற்றில் தள்ளிய மகன்

பணக்கார இளைஞர் ஒருவர், புதிதாக ஜாகுவார் கார் வாங்கித்தர தந்தை மறுத்ததால், ஏற்கனவே தான் வைத்திருந்த பி.எம்.டபிள்யூ சொகுசுக் காரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜாகுவார் கார் வாங்கித்தர தந்தை மறுத்ததால்,பி.எம்.டபிள்யூ சொகுசுக் காரை ஆற்றில் தள்ளிய மகன்
Published on

அரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தையிடம் புதிதாக ஜாகுவார் கார் வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் ஏற்கனவே பெற்றோர் வாங்கிக் கொடுத்திருந்த பி.எம்.டபிள்யூ சொகுசுக் காரை ஆற்றில் தள்ளியுள்ளார்.

அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளார். நீரில் மிதந்து சென்ற கார் ஆற்றின் நடுவில் இருந்த புற்களில் சிக்கி நின்றது.

இதையடுத்து உள்ளூர் ஓட்டுநர்களின் உதவியுடன் காரை வெளியே கொண்டு வர அந்த இளைஞர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

35 லட்சத்துக்கும் மேற்பட்ட விலையுடைய காரை ஆற்றில் தள்ளிய இளைஞரின் தந்தை, மிகப்பெரிய நிலக்கிழார் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com