வேலை முடிந்து கணவர் தாமதமாக வீடு திரும்பியதால் ஆத்திரம்... ஒரு வயது மகளை கொலை செய்த கொடூர தாய்

கூலித்தொழிலாளியான கணவர் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்ததால், ஒரு வயது மகளை, தாய் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

லத்தூர்,

மராட்டியத்தில் கணவர் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்ததால், அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு வயது மகளை, தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லத்தூர் மாவட்டம் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது தினக்கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் (30 வயது) இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஆத்திரமடைந்த அவரது மனைவி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, அவர்களது ஒரு வயது மகளின் முகம், வயிறு, கை, தலை மீது கொடூரமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து அந்த நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com