கடனை திருப்பி செலுத்த முடியாததால் அனில் அம்பானி நிறுவனம் திவால் ஆகிறது

கடனை திருப்பி செலுத்த முடியாததால் அனில் அம்பானி நிறுவனம் திவால் ஆக உள்ளது.
கடனை திருப்பி செலுத்த முடியாததால் அனில் அம்பானி நிறுவனம் திவால் ஆகிறது
Published on

புதுடெல்லி,

அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ். இந்த நிறுவனம், தன்னை திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, கம்பெனிக்கு சொந்தமான சொத்துகளை விற்க கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி முடிவு செய்யப்பட்டது. 18 மாதங்கள் ஆன பிறகும், சொத்துகளை விற்க முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்களுக்கு சிறிதளவு கூட திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்தநிலையில், இதுபற்றி கம்பெனியின் இயக்குனர்கள் குழு வெள்ளிக்கிழமை (நேற்று) ஆலோசனை நடத்தியது. அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுதான், நிர்ணயிக்கப்பட்ட 270 நாட்கள் கால அளவுக்குள் விரைவான கடன் தீர்வுக்கு உகந்த வழிமுறை ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com