

புதுடெல்லி,
பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை 'மோசடி கணக்குகள்' என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்று கேட்டு 3 பொதுத்துறை வங்கிகள் நோட்டீஸ் அனுப்பின.
அதை எதிர்த்து அனில் அம்பானி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த ஒற்றை நீதிபதி, வங்கிகள் நடவடிக்கை எடுக்க தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அனில் அம்பானி 3 மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதே சமயத்தில், அனில் அம்பானி மும்பை ஐகோர்ட்டின் ஒற்றை நீதிபதி முன்பு தனது கோரிக்கையை விடுக்க அனுமதி அளித்தது. அந்த கோரிக்கையை விரைந்து விசாரித்து முடிக்கு மாறு ஒற்றை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.