மிகச் சிறப்பாக பணியாற்றிய தமிழக காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு

மிகச் சிறப்பாக பணியாற்றிய தமிழக காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மிகச் சிறப்பாக பணியாற்றிய தமிழக காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக தன்னை இந்திய நாடு அறிவித்துக்கொண்ட ஜனவரி, 26ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கிய குடியரசுப்பயணம் 72ஆவது ஆண்டை இந்த எட்டுகிறது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று நாடெங்கும் உள்ள காவல்துறையினரில் வீரதீர செயல்புரிந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்நிலையில் மிகச் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த 20 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், ஐஜி பி. மணிகண்டகுமார் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரின் பெருமைமிக்க பணியை பாராட்டி குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு மற்றும் சந்தோஷ் குமார் உட்பட 17 பேருக்கு இந்திய காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com