புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மிலாடி நபியை முன்னிட்டு 27-9-2023 (புதன்) பதிலாக 28-9-2023 (வியாழன்) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-9-2023 அன்று ஜிப்மரில் வெளிபுற நோயாளிகள் பிரிவு இயங்காது . இந்த தேதியில் நோயாளிகள் வெளிபுற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். 27-9-2023 அன்று ஜிப்மர் மருத்துவமனை வழக்கம் போல் இயங்கும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com