ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் 20 எரிபொருள் கப்பல்கள் இந்தியா வருகிறது

இந்த 20 கப்பல்களில், 10 கப்பல்கள் இந்தியக்கொடியை கொண்டதாக உள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் 20 எரிபொருள் கப்பல்கள் இந்தியா வருகிறது
Published on

புதுடெல்லி,

ஈரான் மீதான போரினால் எரிபொருள் போக்குவரத்து பல நாடுகளுக்கும் பாதிக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியதால் இந்த பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் தற்போது அத்தியாவசிய தேவைக்காக ஜலசந்தி திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்தியாவுக்கு ஈரானின் அனுமதியால் 2 கப்பல்கள் வந்தன. அதில் இருந்து சுமார் 97 ஆயிரம் டன் எரிபொருள் இறக்கப்பட்டது.

இந்தநிலையில் மேலும் 22 கப்பல்கள் இந்தியா வருவதற்காக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 20 கப்பல்களில் எரிபொருள் இருக்கிறது. சுமார் 2.15 லட் சம் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.), 3.21 லட்சம் டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி.) மற்றும் 16.76 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஆகியவற்றை அவை ஏற்றி வருகின்றன.

இந்த 20 கப்பல்களில், 10 கப்பல்கள் இந்தியக்கொடியை கொண்டதாக உள்ளன. மற்ற கப்பல்களில் மார்ஷல் தீவுகள், லைபீரியா, கிரீஸ், மால்டா மற்றும் போர்ச்சுகல் ஆகிய கொடிகள் உள்ளதாக தெரிகிறது. இந்த 20 கப் பல்களுடன் இந்தியக்கொடி கொண்ட 2 கொள்கலன் கப்பல்களும் ஹார் முஸ் ஜலசந்தி வெளியாக வெளியேறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com