பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது...15 நாட்களில் 10வது சம்பவம்

பீகாரில் 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
File image
File image
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தில் இன்று மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது கடந்த 15 நாள்களில் பீகாரில் இடிந்து விழுந்த 10வது பாலம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சரண் மாவட்டத்தில் மட்டும் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று மாவட்ட நீதிபதி அமன் சமீர் தெரிவித்தார். உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சரண் மாவட்டத்தில் 2 சிறிய பாலங்கள் இடிந்து விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது..

கடந்த 16 நாட்களில் பீகாரின் மதுபானி, அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட10 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த நிகழ்வுகளை விசாரிக்க பீகார் அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித்துறை மீது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com