தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
Published on

மும்பை,

தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், சித்ரா ராமகிருஷ்ணா. இவர், தேசிய பங்குச்சந்தை விவரங்களை ஏஜன்டுகளுக்கு முன்கூட்டியே கசியவிட்ட ஊழல், நிர்வாக முறைகேடுகள், பண மோசடி தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை அமைப்பான அமலாக்க இயக்ககம் விசாரித்து வருகிறது.

சித்ரா ராமகிருஷ்ணாவின் பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வருமானவரித்துறையும் மற்றொருபுறம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நாராயண், மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்கள் மூவரும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டுகேட்பு விவகாரமானது 2009 - 2017 வரையில் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com