மத்தியபிரதேசம்: குணோ தேசிய பூங்காவில் மற்றொரு சிறுத்தை உயிரிழப்பு..!!

மத்தியபிரதேசத்தில் உள்ள குணோ தேசிய பூங்காவில் மற்றொரு சிறுத்தை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

போபால்,

இந்தியாவில் சீட்டா எனப்படும் சிவிங்கிப்புலி இனத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் நமீபியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து மேற்படி விலங்குகளை இந்தியா பெற்று உள்ளது. நமீபியாவில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 8 சிவிங்கிப்புலிகளும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 12 சிவிங்கிப்புலிகளும் கொண்டு வரப்பட்டன.

இந்த சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தின் குணோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டு உள்ளன. இதில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஷாஷா என்ற சிவிங்கிப்புலி சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி உயிரிழந்தது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த உதய் என்ற 6 வயது சிவிங்கிப்புலி நேற்று உயிரிழந்தது.

காலையில் சோர்வாக காணப்பட்ட அந்த சிவிங்கிப்புலிக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாலை 4 மணியளவில் சிவிங்கிப்புலி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 சிவிங்கிப்புலிகள் உயிரிழந்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com