டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் மற்றொரு மாணவர் மாயம்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் பல்கலை கழக வளாகத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.#JawaharlalNehruUniversity #student
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் மற்றொரு மாணவர் மாயம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் வாழ்க்கை அறிவியலுக்கான முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்தவர் முகுல் ஜெயின் (வயது 26). இந்த நிலையில், கடந்த 8ந்தேதி மாலையில் இருந்து அவர் காணாமல் போயுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 15ந்தேதி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் படித்து வந்த நஜீப் அகமது என்ற மாணவர் மஹி மாண்டவி பகுதியில் அமைந்த பல்கலை கழக விடுதியில் இருந்து காணாமல் போயுள்ளார். உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த அவர் மற்ற மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினை தொடர்ந்து காணாமல் போனது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு பின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நஜீப்பின் தாயார் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த வருடம் மே 16ந்தேதி இந்த வழக்கினை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.

#JawaharlalNehruUniversity | #student

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com