

மேற்கு வங்காள மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அத்துடன் அந்த கட்சிக்குள் மோதல் வெடித்தது. கட்சியின் 80 எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மறுபுறம் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 20 பேர் தனியாக பிரிந்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இந்திய தேசியவாத மக்கள் கட்சியுடன் (என்.சி.பி.ஐ.) இணைந்தனர். இதனால் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 18 மக்களவை எம்.பி.க்களே உள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்களான சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ், பிரகாஷ் சிக் பாரைக் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மாநிலங்களவை எம்.பி.யான வங்காள நடிகை ருக்மணி மாலிக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் பதவியை ராஜினாமா செய்யும் 4-வது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஆவார். இவரது ராஜினாமாவால் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கி ரசின் பலம் 9-ஆக குறைத்துள்ளது.
ருக்மிணி மாலிக் மாநிலங்களவை தலைவர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித் தார். அதில் "நான் மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி றேன். மாநிலங்களவை எம்.பி.யாக எனது பதவிக்காலத்தில் அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்கிய மாநிலங்களவை துணைத்த லைவர் மற்றும் மாநிலங்களவை செயலகத்தின் அனைத்து அதிகாரிகளுக் கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என கூறி உள்ளார். மூத்த வங்காள நடிகர் ரஞ்சித் மாலிக்கின் மகளான இவர், நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் திரைத்துறையில் கோயல் மாலிக் என அழைக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் தான் இவர் மாநிலங்க ளவை எம்.பி.யாக பதவியேற்றார். பதவியேற்ற 3 மாதங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மம்தா பானர்ஜிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது