மராட்டியத்தில் புலி தாக்கி மேலும் ஒரு பெண் பலி

வனப்பகுதிக்கு சென்ற பெண், புலி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மராட்டியத்தில் புலி தாக்கி மேலும் ஒரு பெண் பலி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான புலிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திராப்பூர் மாவட்டம் சிந்தேவாகி வனப்பகுதியில் புகையிலை சேகரிக்க சென்ற மாமியார், மருமகள் உள்பட 3 பெண்களை புலி தாக்கி கொன்றது.

இந்த நிலையில் மேலும் ஒரு பெண் சந்திராப்பூரில் புலி தாக்கி உயிரிழந்து உள்ளார். சந்திராப்பூர் முல் தாலுகா நாகலா கிராமத்தை சேர்ந்தவர் விமலா ஷிண்டே (வயது 65). இவர் நேற்று பீடி இலை சேகரிக்க வீட்டருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அப்போது, புலி ஒன்று தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com