மேற்கு வங்கத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும்: முதல் மந்திரி சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம் மற்றும் லவ் ஜிஹாத், நில ஜிஹாத் போன்ற விவகாரங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
 சுவேந்து அதிகாரி
Published on

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி சுவேந்து அதிகாரி கூறியதாவது: குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களை முன்மாதிரியாகக் கொண்டு மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் . அதற்கான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்’ என்று கூறினார். மேலும், தேசியவாத அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு திரிணமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் வலிமை பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அக்கட்சி, சீர்திருத்தங்கள் உரையாடல் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், பொது சிவில் சட்டம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்திலா அல்லது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாகவும், அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com