ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து வரலாற்றை திரிக்கும் முயற்சி-மம்தா பானர்ஜி கண்டனம்

மோகன் பகவத்தின் கருத்து ஆபத்தானது எனவும் இதை நிச்சயம் அவர் திரும்பப்பெற வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து வரலாற்றை திரிக்கும் முயற்சி-மம்தா பானர்ஜி கண்டனம்
Published on

கொல்கத்தா, -

ராமர் கோவில் குடமுழுக்கு செய்யப்பட்ட தினம்தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர தினம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதைப்போல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இது தேசவிரோதம். நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். இது ஒரு ஆபத்தான கருத்து. இதை நிச்சயம் திரும்பப்பெற வேண்டும். இது வரலாற்றை திரிக்கும் முயற்சி. நமது சுதந்திரத்தை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இந்தியாவுக்காக எங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த கருத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்' என சாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com