சீக்கிய கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் டைட்லர் ஏன் கைது செய்யப்படவில்லை மத்திய அமைச்சர் கேள்வி

1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவர வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் டைட்லரை கைது செய்ய மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கோரிக்கை விடுத்தார். #AntiSikhriots
சீக்கிய கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் டைட்லர் ஏன் கைது செய்யப்படவில்லை மத்திய அமைச்சர் கேள்வி
Published on

புதுடெல்லி

பாராளுமன்றத்திற்கு வெளியே மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெகதீஸ் டைட்லர் , அவரது குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் ஆனால் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை.

சீக்கியர் எதிர்ப்பு கலவரம் நடந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எல்லோருக்கும் தெரியும் யார் அதை செய்தார்கள் என்று. இதுவரை ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. டைட்லர் இப்போது தான் பின்னால் இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார்.ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? அவர் கைது செய்யப்பட வேண்டும். உண்மை கண்டறியும் சோதனை அவரிடம் நடத்தப்பட வேண்டும்.

முன்னதாக பிப்ரவரி 5 அன்று, சீக்கிய எதிர்ப்பு கலவரங்களில் டைட்லர் தனது பங்கை பற்றி ஒப்புக் கொண்டதாக ஒரு சிடி அகாலி தளம் கூறி உள்ளது .

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற சீக்கிய கலவரத்தில் சுமார் 2,800 சீக்கியர்கள் இந்தியா முழுவதும் கொல்லப்பட்டனர், இதில் 2,100 பேர் டெல்லியில் கொல்லப்பட்டனர் என அதிகாரபூர்வ பதிவுகளின்படி கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com