எந்த வழக்காக இருந்தாலும் 3 ஆண்டுகளில் முடிவுக்கு வரும்: அமித்ஷா உறுதி

முன்பெல்லாம் இந்திய குற்றவியல் நீதி நடைமுறை தாமதத்துக்கு புகழ்பெற்றதாக இருந்தது. தற்போது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
எந்த வழக்காக இருந்தாலும் 3 ஆண்டுகளில் முடிவுக்கு வரும்:  அமித்ஷா உறுதி
Published on: 

போபால்,

மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில், புதிய குற்றவியல் சட்டமான பாரதீய நியாய சன்ஹிடா குறித்த கண்காட்சியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திறந்து வைத்தார். பிறகு மாநில அளவிலான கால்நடை வளர்ப்போர் மாநாட்டில் அவர் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

முன்பெல்லாம் இந்திய குற்றவியல் நீதி நடைமுறை தாமதத்துக்கு புகழ்பெற்றதாக இருந்தது. தற்போது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாரதீய நியாய சன்ஹிடா சட்டம் முழுமையாக அமலுக்கு வந்த பிறகு, எந்த வழக்காக இருந்தா லும், முதல் தகவல் அறிக்கையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுவரை 3 ஆண்டுகளில் முடிவுக்கு வரும்.

நமது குற்றவியல் நீதி முறை, உலகிலேயே மிகவும் நவீனமான முறையாக மாறும். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டங்கள், அவர்களது அரசை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டிருந்தன. ஆனால், புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படை தத்துவம், தண்டிப்பது அல்ல. நீதி வழங்குவது ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com