மிக்ஜம் புயல் நிவாரண நிதி அளிக்க விருப்பம் உள்ளவரா? நீங்கள்...!

மிக்ஜம் புயல் நிவாரண நிதி எவ்வாறு அனுப்புவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் நிவாரண நிதி அளிக்க விருப்பம் உள்ளவரா? நீங்கள்...!
Published on

சென்னை,

மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மிக்ஜம் புயல் நிவாரண நிதி எவ்வாறு அனுப்புவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதில்,

மிக்ஜம் புயல் பாதிப்பு - ஜிபே, பேடிஎம் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு tncmprf@iob என்ற ஐடி-மூலம் நிவாரண நிதி அனுப்பலாம். வங்கி இணைய சேவை, கடன் அட்டை மூலம்  https://cmprf.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பணம் அனுப்பலாம். ஐஓபி தலைமை செயலக கிளை கணக்கு எண் : 117201000000070 என்ற எண்ணிற்கும் நிதி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com