'ஹிஜாப்' தடைக்கு எதிராக மேல்முறையீடு: கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

‘ஹிஜாப்' தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
'ஹிஜாப்' தடைக்கு எதிராக மேல்முறையீடு: கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

பெங்களூரு: 'ஹிஜாப்' தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

'ஹிஜாப்' அணிய தடை

உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ.கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் 'ஹிஜாப்' அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும், மாநில அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள், முஸ்லிம் மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தனர்.

மேல்முறையீடு

கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். தங்களின் மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்துமாறு மனுதாரர்கள் கோரினர். அவர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. வழக்குகளின் பட்டியல்படியே மனு வரும்போது தான் விசாரணை நடத்த முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த நிலையில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது.

அரசுக்கு நோட்டீசு

நீதிபதிகள் ஹேமந்த்குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்கும்படி கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் அந்த மனு மீதான விசாரணை வருகிற 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com