தமிழகத்தில் ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

"ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு உருவாகிறது."

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com