கர்நாடகத்தில் 12 நகர வளர்ச்சி ஆணைய தலைவர்கள் நியமனம் ரத்து-மாநில அரசு உத்தரவு

கர்நாடகத்தில் 12 நகர வளர்ச்சி ஆணைய தலைவர்கள் நியமனம் ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் 12 நகர வளர்ச்சி ஆணைய தலைவர்கள் நியமனம் ரத்து-மாநில அரசு உத்தரவு
Published on

பெங்களூரு: கர்நாடக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 47 வாரிய தலைவர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் 12 ஆணையங்களின் தலைவர்களின் நியமனத்தை ரத்து செய்து கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

அதாவது, மைசூரு நகர வளர்ச்சி ஆணைய தலைவர் ராஜீவ், ஹாவேரி நகர வளர்ச்சி ஆணைய தலைவர் சிவக்குமார் சங்கூர், உப்பள்ளி-தார்வார் நகர வளர்ச்சி ஆணைய தலைவர் நாகேஸ், ஒசப்பேட்டே நகர வளர்ச்சி ஆணைய தலைவர் அசோக், மங்களூரு நகர வளர்ச்சி ஆணைய தலைவர் ரவிசங்கர் மிஜார், சிக்கமகளூரு நகர வளர்ச்சி ஆணைய தலைவர் ஆனந்த், ஹாசன் நகர வளர்ச்சி ஆணைய தலைவர் லலாட மூர்த்தி சித்தப்பா, கோலார் தங்கவயல் நகர வளர்ச்சி ஆணைய தலைவர் அஸ்வினி, மடிகேரி நகர வளர்ச்சி ஆணைய தலைவர் ரமேஷ் ஹொல்லா, பாகல்கோட்டை நகர வளர்ச்சி ஆணைய தலைவர் பசவலிங்கப்பா காசிநாத் நவலகி, கலபுரகி நகர வளர்ச்சி ஆணைய தலைவர் தயாகன் பிரகலாத், சாம்ராஜ்நகர் நகர வளர்ச்சி ஆணைய தலைவர் சாந்தமூர்த்தி ஆகியோரின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com