தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் முறையீடு


தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் முறையீடு
x

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் 26-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி ஞானேஸ்வர் குமார் பெயரை அறிவித்துள்ளது. நாளை முறைப்படி பதவியேற்க இருக்கும் ஞானேஷ்குமார், 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், புதிய தேர்த்ல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

மத்திய அரசின் செயல்பாடு, சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை மீறும் வகையிலும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையிலும் உள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை நளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தனது முறையீட்டில் கூறியுள்ளார். புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story