

சென்னை,
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், "
தொடக்க கல்வி இயக்குநரான அறிவொளி பள்ளி கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் வாரிய செயலாளராக இராமேஸ்வர முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளர் கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநராக ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராக குப்புசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.