கோவோவேக்ஸ் தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனைக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

கோவோவேக்ஸ் தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனைக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.
கோவோவேக்ஸ் தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனைக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
Published on

புதுடெல்லி,

அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனம், நோவோவேக்ஸ் கோவ் 2373 என்ற தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது.

இந்த தடுப்பூசியை கோவோவேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கி இந்தியாவிலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வினியோகிக்க புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை பெரியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கான 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்குமாறு கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இதைப் பரிசீலித்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்தது. அதன்பேரில் கோவோவேக்ஸ் தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com