

புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் முக்கியமாக விவசாய உற்பத்தி சந்தைக்குழுவை வலுப்படுத்த ரூ.1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
இது விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு என பாராட்டியுள்ளார். இதைப்போல கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.23,123 கோடிக்கு மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இதன் மூலம் மாவட்டந்தோறும் குழந்தைகள் நல அலகுகள், அவசர சிகிச்சை படுக்கைகள், ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள், ஆம்புலன்ஸ் மற்றும் மருந்துகளை அதிகரிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.