கேரள காவல்துறை பணியில் சேரும் பிக் பாஸ் பிரபலம்

கேரளாவில் கலைத்துறையில் இருந்து பிரபல நடிகை ஒருவர் காவல்துறை பணிக்கு செல்ல உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை, போலீஸ் பணியில் சேர இருக்கிறார்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரத்னாகரன், போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் அப்சரா, பிரபல மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகை. அத்துடன் மலையாள பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று பிரபலமானார். பல தொலைக்காட்சி தொடர்களில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.

இவரது தந்தை ரத்னாகரன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து வாரிசு அடிப்படையில் அப்சராவுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்துள்ளது.

இதுகுறித்து அப்சரா கூறுகையில், "கலைத்துறையில் பயணிப்பதால் எனக்கு போலீஸ் துறையில் சேர விருப்பம் இல்லை. ஆனால் அரசு பணி என்பது நிரந்தர வேலை என்பதால் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் இதில் சேர வற்புறுத்தி வருகிறார்கள். வேலையில் சேருவதற்கான அரசு ஆணையும் கிடைத்து விட்டது. விரைவில் போலீஸ் துறையில் அலுவலக பணியில் சேர இருக்கிறேன்.

பள்ளியில் படிக்கும் போது என்.சி.சி.யில் சேர்ந்து இருந்தேன். அப்போது ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் இருந்தது. கலைத்துறையில் கால் வைத்த பின்பு பழைய விருப்பங்களில் ஈடுபாடு குறைந்து விட்டது. ஆனாலும் நான் தற்போது சேர இருக்கும் புதிய பணியிலும் சாதிப்பேன்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com