

புதுடெல்லி
பூமி வெப்பமயமாதல் பிரச்சினை காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கடல் கொந்தளிப்பு, புயல் போன்றவை அதிகளவில் ஏற்படக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 150 முதல் 200 ஆண்டுகளில் அரபிக் கடலை விடவும் வங்கக்கடலில் நான்கு மடங்கு அதிகமான புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன.
ஆனால் இந்த விகிதம் விரைவில் மாறக்கூடும். அரேபிய கடலில் சூறாவளிகளின் அதிர்வெண் மற்றும் தீவிரம் இரண்டும் அதிகரித்து வருவதாக இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடல் வெப்பநிலை அதிகரிப்பதே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த புனே இந்தியா வானிலை மையத்தின் தலைமை அதிகாரியான கே.எஸ்.ஹோசாலிகர் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் உருவான புயல்களில் 4க்கு 1 என்ற வேறுபாடு நிலவுவதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கரையில் சூறாவளி புயல்களின் எண்ணிக்கையில் இந்த பெரிய வேறுபாட்டிற்கான காரணத்தை விளக்கிய ஹோசாலிகர், கடலில் புயல் உருவாவதற்கு பல காரணிகள் உள்ளன. "புவியியல் இருப்பிடம், கடல் மேற்பரப்பு வெப்பநிலை (எஸ்எஸ்டி, அத்துடன் கடலின் உப்புத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன" என்று கூறினார்.
இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இந்த நிலைமை மாறக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலை விட வெப்பம் குறைவாக உள்ள அரபிக் கடலிலும் இப்போது வெப்ப நிலை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் ராக்ஸி கோல் கூறும் போது
பாரம்பரியமாக, வங்காள விரிகுடாவை விட அரேபிய கடல் மிகவும் குளிரானது. ஆனால் இப்போது அரபிக் கடலும் புவி வெப்பமடைதலால் கூடுதல் வெப்பத்தின் காரணமாக ஒரு சூடான புயல் பிராந்தியமாக மாறி வருகிறது.
சூறாவளிகள் உருவாக சிறந்த கடல் வெப்பநிலை அல்லது எஸ்எஸ்டி 28.5 டிகிரி செல்சியஸ் ஆகும். வழக்கமான 28 டிகிரி எஸ்எஸ்டியில், வங்காள விரிகுடா ஒரு சூடான பிராந்தியமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
"தலைமை சரியில்லை " கமல் கட்சியில் இருந்து மற்றொரு முக்கிய தலைவர் ராஜினாமா
மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்செயலராக இருந்த முருகானந்தம், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.