அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் நிறுத்தமா? மத்திய அரசு விளக்கம்

டிரம்ப் விதித்த வரி விதிப்பை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது.
அமெரிக்காவுடன்  வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் நிறுத்தமா? மத்திய அரசு விளக்கம்
Published on

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகபட்ச பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தது. இதற்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அந்த கடுமையான வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரிவிதிப்பை டிரம்ப் அறிவித்தார். 150 நாட்களுக்கு மட்டும் இந்த வரிவிதிப்பு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பரஸ்பர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுடன் நடந்து வந்தன. தன்னிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் அமெரிக்கா இந்தியாவை நிர்ப்பந்தம் செய்து வந்தது. இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு, அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் ரஷியாவிடம் ஒரு மாதம் மட்டும் கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியது. இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.இந்த தகவலை மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று மறுத்துள்ளது. “அமெரிக்காவுடன் நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த ஊடக அறிக்கைகளை நாங்கள் கவனித்துள்ளோம். இருதரப்பு ஈடுபாட்டில் எந்தவித இடையூறும் இல்லை. பரஸ்பர நன்மை தரும் வர்த்தக ஒப்பந்தத்துக்காக இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, வர்த்தக விசாரணைகளின் புதிய சுற்று ஒன்றை தொடங்கியதால் இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com