ரெயில் டிரைவர்கள் இளநீர் குடிக்க கட்டுப்பாடா? ரெயில்வே மந்திரி விளக்கம்

ரெயில் டிரைவர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை என்று ரெயில்வே மந்திரி விளக்கம் அளிதார்.
ரெயில் டிரைவர்கள் இளநீர் குடிக்க கட்டுப்பாடா? ரெயில்வே மந்திரி விளக்கம்
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, ம.தி.மு.க. எம்.பி. வைகோ, தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர், ரெயில் என்ஜின் டிரைவர்கள் பணிக்கு வரும்போதும், பணியின்போதும் குளிர்பானங்கள், பழங்கள், இருமல் மருந்து, இளநீர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதா என்று கேட்டனர். வெயில் நேரத்தில் என்ஜின் பெட்டி சூடாக இருக்கும் நிலையில், குளிர்பானங்கள் குடிக்க தடை விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று அவர்கள் கூறினர்.

அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ''ரெயில் டிரைவர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை. சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே திருத்தப்பட்டு விட்டன'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com