அயோத்தி வழக்கு: வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அயோத்தி வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது.
அயோத்தி வழக்கு: வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதற்குள் தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

இதுவரை 39 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்றுடன் வாதங்களை முடித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இந்துக்கள் தரப்பிற்கு 45 நிமிடங்களும், முஸ்லீம் தரப்பிற்கு ஒரு மணி நேரமும் இன்று ஒதுக்கப்பட்டது. அதன்படி இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடமால் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com