ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ஜே.பி.நட்டா கண்டனம்

குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ஜே.பி.நட்டா கண்டனம்
Published on

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனமும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் கொதிப்படைய செய்துள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலை பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை மிகக் கொடூரமாக துண்டிக்கப்பட்டு விட்டது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மலிவான அரசியலை கைவிட்டு ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்கான நடவடிக்கையை திமுக எடுக்க வேண்டும்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com