பீகாரில் ராணுவ பயிற்சி விமானம் விழுந்து விபத்து..!

பீகாரில் ராணுவ பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பீகாரில் ராணுவ பயிற்சி விமானம் விழுந்து விபத்து..!
Published on

கயா,

பீகாரின் கயாவில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் விமானம், இரண்டு பயிற்சி விமானிகளுடன் இன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானம் கீழே விழுந்ததைக் கண்ட கிராமவாசிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விமானிகளை விமானத்தில் இருந்து வெளியே மீட்டனர்.

இந்த விபத்தில் இரு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ராணுவ மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து கயா சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் பங்கஜீத் சாஹா கூறுகையில்,

போத்கயா தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை ஒட்டிய வயல்வெளியில் விமானிகள் அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்து நடந்துள்ளது. இரு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நடந்ததா என்பது நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகுதான் தெரியும்" என்று விமான நிலைய இயக்குநர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com