ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம்


ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம்
x

கோதர்நாத் சிவன் கோவில் கடந்த மாதம் 2ம் தேதி திறக்கப்பட்டது.

டேராடூன்,

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திர திவேதி. இவர் இன்று குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றார்.

அங்கு குடும்பத்துடன் அவர் சாமி தரிசனம் செய்தார். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் கோதர்நாத் சிவன் கோவில் கடந்த மாதம் 2ம் தேதி திறக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். குளிர் காலத்தில் பனிபடர்ந்து கேதார்நாத் கோவில் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story