பிபின் ராவத் பயணித்த‌ ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ; பிரதமர் மோடி அவசர ஆலோசனை

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணம் செய்ததை விமானப் படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.
பிபின் ராவத் பயணித்த‌ ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ; பிரதமர் மோடி அவசர ஆலோசனை
Published on

புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. காட்டேரி மலைப்பாதையில் மேலே பறந்த போது கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்து உள்ளனர்.ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 உடல்கள் 80 சதவீதம் எரிந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டன; சில உடல்கள் விபத்துநடந்த பகுதியிலுள்ள மலைச்சரிவின் கீழே விழுந்துள்ளன . தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்களை மீட்கவும்,அடையாளங்களை சரிபார்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணம் செய்ததை விமானப் படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பிபின் ராவத்தின் நிலை என்ன என்று தகவல் தெரியாத நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com