

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஹெலிகாப்டரில் வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங், இரண்டு பைலட்கள் உள்பட 7 பேர் பயணம் செய்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.