

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூரில் பத்னிதோப் பகுதியருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கீழ் நோக்கி பறக்க தொடங்கியது. இதனை கவனித்த உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பின்பு அந்த ராணுவ ஹெலிகாப்டர் பத்னிதோப் என்ற இடத்தில் விபத்தில் சிக்கி தரையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 விமானிகள் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதன்பின் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
அவர்கள் சென்ற பகுதியில் அதிக பனி சூழ்ந்து காணப்பட்டு உள்ளது. இதனால் தெளிவற்ற வானிலை ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.