காஷ்மீரில் மற்றொரு குண்டுவெடிப்பு தாக்குதல்: ராணுவ அதிகாரி பலி; வீரர் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் மற்றொரு குண்டுவெடிப்பு தாக்குதல்: ராணுவ அதிகாரி பலி; வீரர் காயம்
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நவ்ஷெரா பிரிவில் ராணுவ அதிகாரி ஒருவர், வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் எதிரி படைகளால் இந்திய பகுதியில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு ஒன்று திடீரென வெடிக்க செய்யப்பட்டு உள்ளது.

இதில் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார். ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து 2 தினங்களுக்குள் ராணுவ வீரர்கள் மீது மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து நவ்ஷெரா பகுதியில் நடந்த 2வது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும். கடந்த ஜனவரி 11ந்தேதி ரஜோரியின் நவ்ஷெரா பகுதியில் ராணுவ மேஜர் உள்பட 2 ராணுவ உயரதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com