‘ஆபரேஷன் சிந்தூர் 2.0'-க்கு ராணுவம் தயார்- தலைமைத் தளபதி

தேவை ஏற்படும் பட்சத்தில் ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு தயாராக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறினார்.
ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி
ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி
Published on

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்டன. பின்னர் பாகிஸ்தானின் சமரச பேச்சுக்கு பிறகு இந்த போர் முடி வுக்கு வந்தது. இந்தநிலையில் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடைபெற்ற 150-வது பயிற்சிப்பிரிவின் அணிவகுப்பு விழா வில் ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி இதுகு றித்து பேசினார்.

"ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது துல்லியமாகவும், உறுதியுடனும் பதில் அளிக்கும் இந்தியாவின் திறனை நிரூபித்ததோடு, வளர்ந்து வரும் பாதுகாப்புச் சவால்க ளுக்கு நாடு பதிலளிக்கும் விதத்துக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியது" என்று கூறினார். அந்த நடவடிக்கை தேசத்தின் உறுதியைப் பிரதிபலிப்பதாகவும், ஆயுதப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் முக்கி யத்துவத்தை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். போர் நிறுத்தம் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டு உள்ளது என்றும், முப்படைகளும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி 2.0-க்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண் பேடியும் கலந்து கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com