காஷ்மீரில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து ராணுவ வீரர் பலி

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து ராணுவ வீரர் உயிரிழந்தார்.
காஷ்மீரில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து ராணுவ வீரர் பலி
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சந்தர்மோகன் (வயது 28) என்ற ராணுவ வீரர் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சோபோர் பகுதியில் சத்தூசா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை அவர் பணியில் இருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவரது துப்பாக்கி வெடித்தது. அதில் குண்டு பாய்ந்து ராணுவர் வீரர் சந்தர்மோகன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com