பிரேக் பிடிக்காமல் ஓடிய ராணுவ டிரக் மோதியதில் ராணுவ வீரர் பலி

உத்தரபிரதேசத்தில் பிரேக் பிடிக்காமல் ஓடிய ராணுவ டிரக் மோதியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் பிடிசி கண்டோன்மென்ட் உள்ளது. இந்த கண்டோன்மென்ட் கேட் பகுதியில் இந்திய ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப்படையை சேர்ந்த இர்பான் (31) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது வெளியில் இருந்து வந்த ராணுவ டிரக் கண்டோன்மென்ட்டுக்குள் நுழையும் போது பிரேக் பிடிக்காமல் இர்பான் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இர்பானை மீட்ட சக வீரர்கள் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் முழு மரியாதையுடன் ராணுவ வீரரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






