ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோவுரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அறிவிக்கப்படாத முறையில் விதிமீறலில் ஈடுபடும் வகையில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது.

எனினும் இந்த சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனை ராணுவ தரப்பும் உறுதி செய்துள்ளது. ஜம்முவின் அக்னூர் பிரிவில் இதேபோன்ற சம்பவம் ஒன்றில் நேற்று இந்திய ராணுவத்தின் சுமை தூக்கும் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கடந்த 2 நாட்களில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவத்தில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com