ஜம்மு காஷ்மீரில் சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ அதிகாரி ...!

ஜம்மு காஷ்மீரில் சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை உயர் அதிகாரிகள் சரணடைய செய்தனர்.
ஜம்மு காஷ்மீரில் சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ அதிகாரி ...!
Published on

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் முகாம் ஒன்று உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் முகாமில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ராணுவத்தின் முக்கிய பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதனால் சக வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினர். திடீரென கையெறி குண்டுகளையும் தூக்கி வீச ஆரம்பித்தார். இதில் உயர் அதிகாரிகள் 3 பேரும், ராணுவ வீரர்கள் 5 பேரும் காயமடைந்துள்ளனர். பின்னர் ஒரு வழியாக அந்த அதிகாரியை சரணடைய செய்தார்கள்.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது அதிகாரி ஒருவர் எந்த வித தூண்டுதலும் இன்றி திடீரென சக வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுடவும் ஆரம்பித்தார். இதனை கண்ட சக அதிகாரிகள் ஒருவழியாக அவரை சரணடைய செய்தார்கள். இந்த பதட்டமான சூழ்நிலை சுமார் 8 மணி நேரம் நீடித்தது, என்று அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com