பரூக் அப்துல்லா கைது: நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. கண்டனம்

பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. கண்டனம் தெரிவித்தார்.
பரூக் அப்துல்லா கைது: நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. கண்டனம்
Published on

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான பரூக் அப்துல்லா கைது குறித்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் பேசியதாவது:-

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் வந்தபோது, பரூக் அப்துல்லா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலும், காஷ்மீர் அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு உறுப்பினரையும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் முறையாக இந்த மன்றத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் சபாநாயகருக்கும், இந்த பேரவைக்கும் உரிய முறையில் தகவலை தெரியப்படுத்தவேண்டிய மத்திய அரசு, இதுவரை அவர் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடாளுமன்றத்திற்கு தகவல் அளிக்காதது ஏன்?.

இது நாடாளுமன்ற விதிகளை மீறும் செயல் மட்டுமல்ல. சபாநாயகரை அவமதிக்கும் செயல். இதுபோன்ற செயல்கள் அவையின் மாண்பினை குலைக்கும். இதற்காக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com