ஆதார் கசிவை அம்பலப்படுத்திய ரச்னா கைராவுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும்: எட்வர்ட் ஸ்னோடன்

ஆதார் அட்டை தகவல் குறித்து செய்தி வெளியிட்ட 'திடிரிபியூன்' பத்திரிக்கையின் செய்தியாளரை அரசு பாராட்ட வேண்டும் என்று எட்வர்ட் ஸ்னோடன் கூறியுள்ளார். #EdwardSnowden
ஆதார் கசிவை அம்பலப்படுத்திய ரச்னா கைராவுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும்: எட்வர்ட் ஸ்னோடன்
Published on

'தி டிரிபியூன்' பத்திரிக்கையின் செய்தியாளரான ரச்னா கைரா, எவருடைய ஆதார் அட்டை தகவலையும் 500 ரூபாய் கொடுத்தால் 10 நிமிடங்களுக்கு இணையத்தில் பார்க்கலாம் என்று கட்டுரை வெளியிட்டிருந்தார்.

இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தனித்துவ அடையாள ஆணையமான யூ.ஐ.டி.ஏ.ஐ-யின் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவரின் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் நான்கு பிரிவுகளின்கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதார் சட்டத்தின் பிரிவு 36/37இன் கீழும் வழக்கு பதிவாகியுள்ளது.

இவருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஊடகங்களின் சங்கங்கள் அறிக்கைகள் அளித்துவரும் நிலையில், தற்போது அமெரிக்க அரசு தனது குடிமக்களை வேவுபார்ப்பதாக தகவல் கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனின் பதிவிட்டு உள்ளார்.

ஸ்னோடன் தனது ட்விட்டர் பதிவில், ஆதார் தரவுகள் கசிவை அம்பலப்படுத்திய செய்தியாளருக்கு அரசு விருது அளிக்க வேண்டுமே தவிர விசாரணை அல்ல என்றும், உண்மையிலேயே நீதி குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது என்றால், பில்லியன் கணக்கான இந்தியர்களின் அந்தரங்க தகவல்களை அழிக்கும் கொள்கைகளில் சீர்திருத்தத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதார் கசிவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமெனில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யூ.ஐ.டி.ஏ.ஐதான் கைது செய்யவேண்டும் என்றும் ஸ்னோடன் குறிப்பிட்டுள்ளார்.

#Aadhaar #UIDAI #EdwardSnowden

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com