பாலியல் வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு கைது வாரண்டு- ராமநகர் கோர்ட்டு உத்தரவு

பாலியல் வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு கைது வாரண்டு அளித்து ராமநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு கைது வாரண்டு- ராமநகர் கோர்ட்டு உத்தரவு
Published on

பெங்களூரு: ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில் ஆசிரமத்தில் உள்ள பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்தியானந்தா சாமியார் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த பாலியல் தொல்லை வழக்கு நேற்று ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சாமியார் கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com