சொத்து பிரச்சினை அண்ணனை தாக்கி கொன்ற வியாபாரி கைது

பண்ட்வால் அருகே சொத்து பிரச்சினை அண்ணனை தாக்கி கொன்ற வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சொத்து பிரச்சினை அண்ணனை தாக்கி கொன்ற வியாபாரி கைது
Published on

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பட்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் பங்கேரா(வயது 49). வியாபாரியான இவரது சகோதரர் கணேஷ் பங்கேரா(51). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பத்மநாபன், கணேசை தாக்கினார். அதில் பலத்த காயம் அடைந்த கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து விட்டலா போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com